அறிக்கை: துளசி ஐயா வாண்டையார் மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் அச்சிடுக
திங்கட்கிழமை, 17 மே 2021 18:16

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : பழம்பெரும் காங்கிரசுத் தலைவரும், கல்வி வள்ளலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துளசி ஐயா வாண்டையார் அவர்கள் காலமான செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

பெருங்குடியில் பிறந்திருந்தாலும் மிக எளிமையானவராகவும் அனைவராலும் அணுகக் கூடியவராகவும் கற்றறிந்த சான்றோராகவும் விளங்கினார்.

அவருடையத் தந்தை கிருஷ்ணசாமி வாண்டையாரைப் போலவே இவரும் பெருந்தலைவர் காமராசர் தலைமையில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டு இறுதி வரை அவரை பின்பற்றியவர். இவரின் மறைவின் மூலம் தமிழகம் மிகச் சிறந்த ஒரு பண்பாளரை இழந்து விட்டது. அவரின் மறைவின் மூலம் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.