ஒற்றெழுத்தின் சிறப்பு! குடந்தை வய்.மு. கும்பலிங்கன் அச்சிடுக
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:04

தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். மேற்குமொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை நான் பசை எழுத்து என்றும், ஒட்டு எழுத்து என்றும் சொல்லுவேன். ஒற்று வந்தால் ஒரு பொருள், ஒற்று வரவிலை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் அந்தச் சொல் வேறுபாட்டை - பொருள் வேறுபாட்டை இங்குப் பார்ப்போம்

 

  1. கடைத்தெரு - வியாபாரக் கடைகள் உள்ள தெரு
    கடை தெரு - கடைசியான தெரு, கடையும், தெருவும் (உம்மைத் தொகை)
  2. புகழ்ச்செல்வி - புகழுக்குரிய செல்வி
    புகழ் செல்வி புகழும், செல்வியும் (உம்மைத் தொகை)
    புகழும் செல்வி, புகழ்கின்ற செல்வி, புகழ்ந்த செல்வி (வினைத்தொகை)
  3. தலைக்கவசம் - தலைக்கான கவசம்
    தலை கவசம் தலையும், கவசமும் (உம்மைத் தொகை)
  4. கல்வித் தொகை - கல்விக்கான தொகை
    கல்வி தொகை கல்வியும், தொகையும் (உம்மைத் தொகை)
  5. கிளிக்கூண்டு - கிளிக்கானக் கூண்டு
    கிளி கூண்டு - கிளியும், கூண்டும் (உம்மைத் தொகை)
  6. புளிச்சோறு - புளியால் ஆனச் சோறு
    புளி சோறு புளியும், சோறும் (உம்மைத் தொகை)
    புளித்த சோறு, புளிக்கின்ற சோறு, புளிக்கும் சோறு, (வினைத்தொகை)
  7. காக்கிச்சட்டை - காக்கி நிறத்தாலான சட்டை
    காக்கி சட்டை காக்கியும், சட்டையும் (உம்மைத் தொகை)
  8. கைக்குட்டை - கைக்கு அடக்கமான சிறிய துணி
    கை குட்டை குட்டையான கை
  9. மோர்க்குழம்பு - மோரால் ஆனக் குழம்பு
    மோர் குழம்பு மோரும், குழம்பும் (உம்மைத் தொகை)
    மோர்ந்த குழம்பு, மோரும் குழம்பு, மோர்கின்ற குழம்பு (வினைத்தொகை)
  10. 30. ஆடித்தள்ளுபடி - ஆடி மாதத்தில் பொருள் வாங்கினால் காசுத் தள்ளுபடி
    ஆடி தள்ளுபடி 12 மாதங்களில் ஆடி மாதம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது.

- தொடரும்