நற்றமிழ்த் தேசியம் வெற்றிபெற... - பேராசிரியர் அறிவரசன் அச்சிடுக
வியாழக்கிழமை, 15 ஜூன் 2017 12:16

தெள்ளு தமிழைக் காப்பதற்கும்
தேசிய உரிமை மீட்பதற்கும்
நல்ல ஈழ விடுதலைக்கு
நற்றுணை யாக நிற்பதற்கும்
வெள்ளம் போல தமிழரெலாம்
வேற்றுமை மறந்து திட்டமிட்டுக்
கொள்கை வழியில் ஒன்றுபட்டுக்
குறிக்கோள் வெல்லச் செயற்படுவோம்.

விரிந்து பிரிந்து வேறுபட்டு
விலகி நின்றால் குறியிலக்கை
நெருங்கி வெல்ல முடியாது
நேரிய கொள்கை அடிப்படையில்
ஒருங்கி ணைந்து தமிழரெல்ாம்
ஓரணி யாகிச் செயற்பட்டால்
பொருந்தும் வெற்றி நமக்காகும்
புகழும் நமக்கே ஆகுமையா
ஒற்றுமை பேணி ஓரணியில்
உயர்தமிழ் இனமாய்க் கூடிநிற்போம்
நற்றமிழ்த் தேசியம் வெற்றிபெற
நாமெலாம் ஒன்றாய் எழுந்திடுவோம்
முற்றுகைப் பகையுடன் முரண்பட்டு
மோதிடக் களத்தில் முன்னிற்போம்
வெற்றி நமக்கே உரித்தாகும்
வெல்க கொடி பறக்கும் தாயகத்தில்