தமிழ்வழிக் கல்விக்காக பேசா நோன்புப் போராட்டம் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:06

திருப்பூர் இயற்கை வாழ்வகம் நிறுவனர் க. இரா. முத்துச்சாமி  அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தொடக்க நிலை முதல்  இறுதி நிலை வரை அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும் என்ற  கோரிக்கையை முன்  வைத்து 24-03-2018 முதல் பேசா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். 

அவரின் அறவழிப் போராட்டம்  ஆட்சியாளர்களின் விழிகளைத் திறக்க உதவுமாக.
தமிழ்த் தொண்டர்  க.இரா. முத்துச்சாமி அவர்களுக்கு நமது வாழ்த்தும் - பாராட்டும் உரியதாகுக.