18ஆண்டுகளுக்குப் பிறகு பொழிலன் வழக்கில் அரசு மேல்முறையீடு அச்சிடுக
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 14:58

கடந்த 1988ஆம் ஆண்டு உதகை பூங்காவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தோழர்கள் பொழிலன்,  தமிழ்முகிலன், பாண்டியராசன், நாராயணன்,  சுப்பிரமணியன் ஆகியோர் மீது காவல்துறையினர் தொடுத்த வழக்கில் அவர்களுக்கு கோவை வழக்கு மன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மேல் முறையீடு செய்ததில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

18ஆண்டுகள் கழித்து இப்போது அந்த வழக்கில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் பழிவாங்கும் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். தோழர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கினை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.