ஸ்டெர்லைட் ஆலை அரசு உறுதியான நிலைப்பாடு எடுக்கவேண்டும் முன்னாள் நீதிநாயகம் சந்துரு வற்புறுத்தல் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2019 12:07

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சூழலை எவ்வாறெல்லாம் மாசு படுத்தியுள்ளது, அதன் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட அபாயகரமான விளைவுகள் என்ன ஆகியவை குறித்து ஆதாரப் பூர்வமான ஆவணங்களுடன் தமிழக அரச உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாலொழிய வெற்றிபெற இயலாது" என முன்னாள் நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் எச்சரித்துள்ளார்.

””“"பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அளித்துள்ளத்  தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ெதாடுக்கப் போவதாக தமிழக அரசு  அறிவித்துள்ளது. இது ெவற்றிபெறாது. ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென தமிழக அரசு பிறப்பித்த ஆணை ஊசலாட்டம் நிறைந்த ஒன்றாகும். கடந்த 20 ஆண்டு காலமாக இந்த ஆலைக்கு எதிராக மக்கள்போராடி வருகிறார்கள். ஆனால் மாநில அரசு,  ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த மே மாதம் இந்த ஆலைக்கு எதிரானப்போராட்டத்தில் 13பேர் சுட்டுக்கொல்லப்படும் வரை அரசு தனதுபோக்கைத் திருத்திக் கொள்ளவில்லை. இந்த ஆலையின் விளைவாக சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டதைக் குறித்தோ ஆலையின் அத்துமீறல்கள் குறித்தோ சரியான ஆவணங்களையும் ஆதாரங்களையும் திரட்டி அளித்தால்தான் சட்டப்போராட்டத்தில் வெற்றிபெற முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வளவு காலமாக ஆலைக்கு சாதகமாக செயல்பட்ட அரசு திடீரென்று தனதுப்போக்கை மாற்றிக் கொள்ள முடியாது. இந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கொள்கை முடிவினை அரசு எடுக்கவேண்டும். அதுதான் சட்டரீதியாக செல்லுபடியாகும்.
மேற்கு வங்கத்தில் நந்தி கிராமத்தில் சிற்றுந்து உற்பத்திெ சய்யும் ஆலையை டாடா நிறுவனம் அமைக்க  முற்பட்டபோது அதற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து நடத்தியப் போராட்டத்தின் விளைவாக அந்த ஆலையை அங்கு நிறுவ முடியவில்லை. அதைப்போல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வெடித்தால்தான் அந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும்".