ஜார்ஜ் பெர்னாண்டஸ் நினைவேந்தல் நிகழ்வு அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2019 12:44

தஞ்சை முள்ளிவாய்க்கால்  நினைவு முற்றத்தில் 12-02-2019 செவ்வாய் மாலை 5 மணிக்கு மேனாள் மத்திய  அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திரு. ந.மு. தமிழ்மணி தலைமை தாங்கினார். திரு. வி. பாரி வரவேற்புரை நிகழ்த்தினார். ஐயனாபுரம் சி. முருகேசன், திரு. சு. பழனிராசன்,  திரு. து. குபேந்திரன், திரு. மு. முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்தப் பத்திரிக்கையாளர்  திரு. க. சந்திரசேகர், புலவர் க. முருகேசன் மற்றும்  திரு. பழ. நெடுமாறன் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சனையில் திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ்  அவர்கள் தமிழர்களுக்கு பக்கபலமாக எவ்வாறு செயல்பட்டார் என பழ. நெடுமாறன் விளக்கவுரையாற்றினார். திரு. சதா. முத்துக்கிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினார்.