தமிழர் தேசிய முன்னணி தலைமைச் செயற்குழு கூட்டம் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:33

16-03-2019 காரிக்கிழமை  அன்று காலை 11 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி சோழியச் செட்டியார்கள் சமூகக் கூடத்தில் நடைபெற்றது.  பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி அனைவரையும் வரவேற்றார். தலைமை தாங்கிய "பழ. நெடுமாறன்" நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், நமது கட்சி கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும் அவரவர்களின் கருத்துகளை சுருக்கமாகக் கூறுமாறு வேண்டிக் கொண்டார்.  
அதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், சிறப்பு  அழைப்பாளர்கள் ஆகியோர் பேசினர். இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் கருத்துரை வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை தலைவருக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை மாநிலத்  தலைவர் துறை. மாலிறையன் அனைவருக்கும் நன்றி கூறினார்.