தஞ்சையில் முப்பெரு விழா அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:35

உலக மகளிர் நாள் விழா, உலகத் திருக்குறள் மாமன்றம், புரட்சிக்கவி அறக்கட்டளை ஆகிய இயக்கங்களின் மூன்றாம் ஆண்டு விழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

இவ்விழாவிற்கு புலவர் இரா. மாறன் தலைமை தாங்கினார்.  கவிஞர் க. பத்மா அவர்களின் 60ஆம் ஆண்டு மணி விழாவினை புலவர் மோகன் திருக்குறள் வழியில் நடத்தி வைத்தார். கவிஞர் க. பத்மா அவர்களின் மணிவிழா  மலரினை பழ. நெடுமாறன் வெளியிட இயக்குநர் வி. சேகர் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் து. கிருஷ்ணசாமி வாண்டையார், ஆதிலிங்கம், வை.மு. கும்பலிங்கன்,    சா. மல்லிகா, க. சாந்தி இராசேந்திரன், செயலட்சுமி ஏழுமலை, செயந்தி உலகநாதன், ஆர். கோவிந்தராசன், முனைவர் சி. சோதிலெட்சுமி, கி. நெடுஞ்செழியன், கா. இராசாமணி, முனைவர் சு. சத்யா ஆகியோர்கள் வாழ்த்திப் பேசினர். முனைவர் அ. ஜோஸ்பின் புனிதா செந்தில்குமார் தொகுப்புரை வழங்கினார். அனைவருக்கும் கவிஞர் க. பத்மா நன்றி கூறினார்.