உலகத் தமிழர் பேரமைப்பு - முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு - தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்பு அச்சிடுக
புதன்கிழமை, 17 ஜூலை 2019 12:14

2019 சூலை 6 சனி, 7 ஞாயிறு ஆகிய நாட்களில் உலகத்  தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10ஆம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தமிழறிஞர்களும், அறிஞர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும், தலைவர்களும் மற்றும் திரளான மக்களும் இம்மாநாட்டில் உற்சாகமுடன் கலந்துகொண்டனர். காலை 9.30 மணிக்கு கோட்டைத்தெரு செந்தில்குமார் குழுவினரின் மங்கல இசையுடன் மாநாடு தொடங்கியது.
காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முகப்பில் உலகத் தமிழர் பேரமைப்பின் கொடியினை அயனாபுரம் திரு.  சி. முருகேசன் ஏற்றி  வைத்தார். சுற்றிலும் குழுமியிருந்தோர்  முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாநாட்டின் தொடக்கத்தில் உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.
காலை 10.15 மணியளவில் மாநாட்டு மலர் - நூல் -  குறுந்தகடு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வுகள் திரு. ம. பொன்னிறைவன்  தலைமையில்  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு திரு. தி.ம. பழனியாண்டி  முன்னிலை வகித்தார்.  சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன் மாநாட்டு மலரை வெளியிட்டு உரையாற்றினார். மாநாட்டு மலரை திருவாளர்கள் சி.சி. சாமி, தா. மணிமொழியன், சிமியோன் சேவியர்ராஜ்,   இராம. சந்திரசேகரன், அருண் மாசிலாமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினைப் பொறி. ஜோ. ஜான்கென்னடி தொகுத்து வழங்கினார்.
10.45 மணியளவில் ஓவியர் டிராட்ஸ்கி மருது தீட்டிய "மாவீர நடுகற்கள்" நூலின் வெளியீடு நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு  திரு. பழ. நெடுமாறன் தலைமை  தாங்கினார். திரு. துரை. குபேந்திரன் முன்னிலை வகித்தார். நூலினை திருவாளர்கள் கி.ஆ.பெ.வி. கதிரேசன், பொறி. திருநாவுக்கரசு, மரு. கண்ணன், கோ. பாபு,  சதா. முத்துக்கிருட்டிணன்,  க. முருகையன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  நூலை அறிமுகம் செய்து பேரா. பா. மதிவாணன் உரையாற்றினார்.
திரு. வைகறைவாணன் எழுதிய "கொடை தருக! கோடி பெறுக!”  என்னும் உரைநடை வெண்பா நூலினை முனைவர் இரா. கலியபெருமாள் அறிமுகம் செய்து உரையாற்றினார். திருவாளர்கள் சாமி கரிகாலன், துரை. மதிவாணன், புலவர் கரு. அரங்கராச , வெ, ஜீவக்குமார் ஆகியோர் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
"முள்ளிவாய்க்கால் முடிவுறாத் துயர்"” என்னும் இசைக் குறுந்தகட்டினை திருவாளர்கள் ம. சாமிநாதன் வெளியிட  செந்தமிழ்க்கோ, கு.செ. வீரப்பன், அ. இருதயராசு, வடுவூர் முருகேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பிரான்சு நாட்டில் வாழும் தமிழர்களின் அமைப்பான தேசக்காற்று இணையம் உருவாக்கிய இந்தக் குறுந்தகட்டிற்கு சிபோதன் இசையமைத்துள்ளார். மதுரை, மரு. கண்ணன் இதை உருவாக்கியுள்ளார்.
நண்பகல் 12 மணிக்கு ்முள்ளிவாய்க்கால் மண்ணே!” என்ற தலைப்பில் பாவரங்கம் திரு. துரை.  மாலிறையன் தலைமையில் நடைபெற்றது. திரு. சா. இராமன் முன்னிலை வகித்தார். திரு. ச. கலைச்செல்வன் தொகுத்துரைத்தார். இந்த அரங்கில் பாவலர்கள் கடவூர் மணிமாறன், தமித்தலட்சுமி, இளமுருகன், தஞ்சை இனியன், அருணா சுந்தரராசன், த.ரே. தமிழ்மணி, ஆகியோர் பங்கேற்றனர்.  
மாலை 3 மணிக்கு 'தமிழர் போர்ப் பரணி'” அரங்கம் நடைபெற்றது. முனைவர் பக்தவத்சல பாரதி தலைமைதாங்கினார், புவலர் க. முருகேசன் முன்னிலை வகித்தார். திரு. இறையெழிலன் இந்நிகழ்ச்சியினை தொகுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் கண. குறிஞ்சி, முனைவர்     மு. இளமுருகன், பேரா. வி. பாரி ஆகியோர்  உரையாற்றினர்.
மாலை 6 மணிக்கு நடைபெற்ற பொது அரங்கிற்கு தஞ்சை   அ. இராமமூர்த்தி தலைமை தாங்கினார். புலவர் இரத்தினவேலு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியினை திரு. ச. கலைச்செல்வம் தொகுத்து வழங்கினார். திருவாளர்கள் குளத்தூர் மணி, பேரா. த. செயராமன், இயக்குநர் வெ. சேகர், பொழிலன், பி.ஆர். பாண்டியன், தமிழ்நேயன், வ. கெளதமன்,   செள. சுந்தரமூர்த்தி, இரா. மங்கையர்செல்வன், சிவ. காளிதாசன்,  மு.நா.பா.  தமிழ்வாணன், பாவலர் இராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். அனைவருக்கும் பழ. பிரகதீசு நன்றி  கூறினார்.  
இரண்டாம் நாள் மாநாடு
07-07-2019 ஞாயிற்றுக்கிழமை மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் காலை 10 மணிக்கு தொடங்கின. முதலில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு முனைவர் இராம. சுந்தரம்  தலைமை தாங்கினார்.  வழக்கறிஞர் பானுமதி இக்கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றினார்.  புலவர்  துரை. மதிவாணன்,   பசுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். புலியூர் முருகேசன் தொகுப்புரை வழங்கினார்.
இந்த அரங்கில் பேரா. வீ. அரசு,  திருவாளர்கள் பா. செயப்பிரகாசம், கா. அய்யநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற கருத்தரங்கிற்கு திரு. ந.மு. தமிழ்மணி  தலைமை தாங்கினார். திருவாளர்கள் ச. செளந்தரபாண்டியன்,  வ. தீனதயாளன், எஸ்.டி. மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பாவலர் காசி ஆனந்தன், பேரா. இராமு. மணிவண்ணன், பேரா. காமராசு, வைகறைவாணன்,                                     மரு. பாரதிசெல்வன் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியினை இரா. இராசசேகரன் தொகுத்து வழங்கினார்.
மாலை 6  மணிக்கு நடைபெற்ற பொது அரங்கிற்கு  திரு. பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். திரு. ஜோ. ஜான்கென்னடி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிய கூடியிருந்தோர் வழிமொழிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. திருவாளர்கள் இரா. திருஞானம், சு. பழநிராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் அ. நல்லதுரை தொகுத்துரைத்தார்.
திருவாளர்கள் வைகோ, தெகலான் பாகவி, தமிமுன் அன்சாரி,  உ. தனியரசு, கோ. நீலமேகம், பெ. மணியரசன், மு.அ. பாரதி, குடந்தை அரசன் ஆகியோர் உரையாற்றினார். ச. கலைச்செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.