திருமண விழாக்கள் அச்சிடுக
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021 12:16

மணமக்கள்:

அருணா தேவி – குணசேகரன்

தமிழர் தேசிய முன்னணியின் பொருளாளர் திரு. ம. உதயகுமார் – திருமதி. தனலெட்சுமி இணையரின் மூத்த மகள் செல்வி அருணா தேவி, திரு. இராசேந்திரன் – திருமதி. ஆதிலெட்சுமி இணையரின் இளைய மகன் செல்வன் குணசேகரன் ஆகியோரின் திருமண விழா 11-11-21 அன்று கூவத்தூர் செயந்தி மகால் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரளான உறவினர்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள்:

யாழ்மொழிச் செல்வன் – அருள்மணி

எழுத்தாளர் திரு. வைகறைவாணன் – திருமதி. இந்திரா தேவி இணையரின் மகன் செல்வன் யாழ்மொழிச் செல்வன், திரு. நா. இராமையன் – திருமதி. புவனேசுவரி இணையரின் மகள் செல்வி அருள்மணி ஆகியோரின் திருமண விழா 11-11-21 காலை 10 மணிக்கு தஞ்சை சோழன் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரளான உறவினர்களும் மற்றும் தோழர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.