செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 150 - மகாகவி பாரதி நினைவு – 100 விழா - தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 12:31

01.10.2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆவது பிறந்தநாள், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு மற்றும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைவரான பேரா. வி. பாரி அனைவரையும் வரவேற்றார். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் கல்விக்கோ முனைவர் கோ. விசுவநாதன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். சி. முருகேசன், சா. இராமன், எம்.ஜி.கே. நிஜாமுதீன், து. குபேந்திரன், சு. பழநிராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “செக்கடியில் நொந்த நூலோன் சிதம்பரனார்” என்னும் தலைப்பில் முனைவர் இரா. காமராசு அவர்களும், “புதுநெறி காட்டிய புலவன் பாரதி” என்னும் தலைப்பில் தோழர் சி. மகேந்திரன் அவர்களும் சிறப்பாக உரையாற்றினர்.

vocfunction.16.10

வ.உ.சிதம்பரனார் அவர்கள் கவிதை நடையில் எழுதிய தன் வரலாற்றினை உரை நடை வடிவிலான நூலாக புதுவை ந.மு. தமிழ்மணி அவர்கள் இயற்றியுள்ளார். அந்த நூலின் அறிமுகவுரையை பேரா. இரா. முரளிதரன் ஆற்றினார். சீனு. மோகனதாசு, மரு. இரா. பாரதிசெல்வன், ந. சிவகுரு, ஜோ. ஜான்கென்னடி ஆகியோர் இந்நூலினைப் பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர் ந.மு. தமிழ்மணி ஏற்புரை நிகழ்த்தினார். பழ. நெடுமாறன் நிறைவுரையாற்றினார். பேரா. சோம. கண்ணதாசன் நன்றியுரை கூறினார்.

திரளான மக்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.