தேயம் - தேசம் - பாவாணர் கருத்து அச்சிடுக
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:49

"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே''
- (குறுந். 11:5-8)

"மொழிபெயர் பன்மலை யிறப்பினும்
ஒழிதல் செல்லா தொண்டொடி குணானே.''
- (ஐங். 321:4--5)
"தமிழ்கெழு மூவர் காக்கும்
மொரீபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே''
- (அகம். 31:14--15)
"பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்''
- (அகம். 211:7--8)
என்னும் கடைக்கழகச் செய்யுட் பகுதிகள். தமிழ வணிகரின் வடதிசை மொழிபெயர் தேயச் செலவைக் கூறுதல் காண்க.
தமிழ் வரலாறு - ஞா. தேவநேயப்பாவாணர் -பக்கம் - 38