தமிழ்த் தேசிய உணர்வு அச்சிடுக
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:58

தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் தேசிய இன உணர்வு என்பது தொன்றுதொட்டு உருவாகி இருக்கவில்லை. கி.பி. 18ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக நவீன தேசிய இன உணர்வு என்பது தோன்றியது. எனவே தமிழர்கள் தேசிய இன உணர்வற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானதாகும்.

தொல்காப்பியம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரையிலும் மொழியுணர்வு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கி வந்திருக்கிறார்கள். நூற்றாண்டுதோறும் பல்வேறு போராட்டங்கள், மாற்றங்கள் ஆகியவற்றுக்கு நடுவே இலக்கியப் படைப்பாக்கம் என்பதும் அவற்றை பாதுகாப்பது என்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. சங்ககாலம், காப்பிய காலம், சமய இலக்கிய காலம், உரையாசிரியர் காலம், சிற்றிலக்கிய காலம் என அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு காலக்கட்டங்களிலும் ஏராளமான நூல்கள் உருவாக்கப்பட்டு மொழி அழியாமல் காக்கப்பட்டுள்ளது. புலவர்களுக்கும், பாணர்களுக்கும் மன்னர்களும், மக்களும் புரவலர்களாக விளங்கினார்கள். நமது மொழியை உயிரோட்டம் கொண்டதாக நிலை நிறுத்தும் முயற்சியில் அனைவருக்கும் பங்கிருந்தது. இந்த மொழியுணர்வுதான் நவீன தமிழ்த் தேசிய உணர்வாக வடிவம் கொண்டு வளர்ந்தோங்கி வருகிறது

(மனித குலமும்-தமிழ்த் தேசியமும் - பழ. நெடுமாறன், பக்கம் 58)