பேரறிவாளன்-இரவிச்சந்திரன் உடல் நலம் பாதிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:12

இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், இரவிச்சந்திரன் ஆகியோரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவர்களுக்கு சரியான மருத்துவ உதவிகள் அளிக்கப்படவில்லை.

அவ்வப்போது அவர்களை காவல் துறையின் பலத்த காவலுடன் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் காட்டிவிட்டு உடனடியாக மறுபடியும் சிறைச்சாலைக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.

மருத்துவமனையிலேயே அவர்களை அனுமதித்து தொடர்ந்து மருத்துவ உதவி அளிக்கப்படாவிட்டால் அவர்களின் உடல் நிலை மேலும் சீர்குலைந்து போகும். 25 ஆண்டு காலமாக சிறையில் வாடும் அவர்களின் உடல் நலம் மட்டுமல்ல மன நலமும் குன்றியுள்ளது. இவர்களுக்கு பரோல் விடுதலை கொடுத்து மருத்துவ சிகிச்சை தர உதவ வேண்டும் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறோம்.

செவ்வாய்க்கிழமை, 03 மே 2016 12:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.