தமிழர் தேசிய முன்னணி
ஆட்சி அதிகாரம் செலுத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:15

பா.ஜ.க. ஆட்சியில் எந்த அதிகாரப் பொறுப்பிலும் இல்லாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகத், தலைமையமைச்சருக்கும் மேலான அதிகாரத்தை செலுத்தி வருகிறார்.

6-10-17 அன்று டெல்லியில் மத்திய பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களையும் பொதுத் துறையில் உள்ள நிறுவனங்களின் தலைவர்களையும் அழைத்து மோகன் பகத்  கலந்தாய்வு செய்தார். இக்கூட்டத்தில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் இயக்குநர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 
வரலாறு காணாத வகையில் மக்கள் நடத்திய அமைதிப் புரட்சி - பழ. நெடுமாறன் பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 13 மே 2011 13:12
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.
 
விடுதலைப்புலிகள் மீதான தடை தீர்ப்பாயத்தில் பழ.நெடுமாறன் மனுதாக்கல் - வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதாடினார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 05 அக்டோபர் 2010 21:07
விடுதலைப்புலிகள் இயக்கத்தை சட்ட விரோத நடவடிக்கைள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்திய அரசு தடை செய்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இத்தடையை நீட்டிப்பதற்கு முன் தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்தப்படுவது வழக்கம். அதைப் போல இம்முறை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 5-10-2010 அன்று காலையில் சென்னை மல்லிகை மாளிகையில் நடைபெற்றது.
விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டுமென பழ.நெடுமாறன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழக்கறிஞர் என். சந்திரசேகரன் பின்கண்ட விவாதங்களை முன்வைத்தார்.
 
தேர்தல் - பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2011 17:43
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
''தமிழர் தேசிய இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை மீதான வழக்கு இன்னும் முடிவடையாத சூழலில் எங்களின் கரங்கள் கட்டுண்டு கிடக்கின்றன. எனவே நேரடியாகத் தேர்தல் களத்தில் போட்டியிட முடியாத நிலையில் வாக்காளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.
 
சட்டவிரோதமாகச் செயல்படும் காவல்துறை : உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் - பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 ஜூன் 2010 20:27
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
விழுப்புரம் அருகே இரயில்வே தண்டவாளம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சியையொட்டி தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பத்து இளைஞர்களைக் காவல்துறை கைதுசெய்து நான்கு நாட்களாக விசாரணை என்ற பெயரால் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக நடந்துகொண்டதை உயர்நீதிமன்றம் மிகக்கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.
 
«தொடக்கம்முன்12அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 2 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.