தென்செய்தி
உச்சநீதிமன்றத்தின் ஆணை அநீதிக்கு மேல் இழைக்கப்படும் அநீதியாகும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:44

கடந்த 45 நாட்களுக்கு மேலாக தில்லியைச் சுற்றி முற்றுகைப் போராட்டத்தை உழவர்கள் நடத்தி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான உழவர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் மிகக் கொடுமையான குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் தங்களது வாழ்வுரிமைகளைக் காப்பதற்காக உறுதியுடனும் தீரமுடனும் போராடுகிறார்கள்.

 
'தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:35

கடந்த 22ஆண்டுகாலமாகத் தமிழர்களின் பேராதரவோடு தென்செய்தி இதழ் மாதந்தோறும் 1, 15 ஆகிய நாட்களில் தவறாமல் வெளிவந்துகொண்டிருந்தது. அச்சிதழ் வடிவத்திலும், இணைய இதழ் வடிவத்திலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது.

 
உ ழவர் போராட்டம் - பெட்டிச் செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:45

பெட்டிச் செய்தி-1
பத்திரிக்கைகளின் தகாத போக்கு
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தியாவெங்கிலும்  உள்ள பெரும்பாலான காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. பெரு நிறுவனங்களின் உரிமையாளர்களே இவற்றுக்கும் அதிபர்களாக விளங்கிய காரணத்தினால், இவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது மோடி அரசுக்கு எளிதாயிற்று.

 
வரலாறு காணாத உழவரின் புரட்சி - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 13:02

வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் கிளர்ந்தெழுந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய காலத்தில்கூட இத்தகைய வீறுகொண்ட, கட்டுப்பாடு நிறைந்த மாபெரும் போராட்டம் தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றதில்லை.

 
பழமை வாதங்களைப் புகுத்துவதற்கே சமற்கிருதத் திணிப்பு - நீதிநாயகம் கே. சந்துரு கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:35

JusticeChandru"அகில இந்திய வானொலியில், தினமும் 15 நிமிடங்களுக்கு சமற்கிருதத்தில் கட்டாய ஒலிபரப்பு செய்யவேண்டும்” என்ற மத்திய அரசின் சுற்றறிக்கை, மீண்டும் தமிழகத்தில் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது."இறந்துபோன அம்மொழிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்" என்றும், "இது மறைமுகமாக சமற்கிருதத்தை மீண்டும் திணிக்கும் முயற்சி" என்றும் தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிக்கைவிட்டிருக்கின்றன.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 85 இல்
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.