தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
இறப்பின்றித் துலங்குவார் எந்நாளும்! -பேரா. ய. மணிகண்டன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 31 ஜூலை 2021 15:11

elankumaranaar

இரண்டாண்டுகளுக்கு முன்னர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் மூன்று நூல்களை வெளியிட்டு உரையாற்ற மதுரை நண்பர் பி. வரதராசன் ஏற்பாட்டில் சென்றிருந்தேன். மாணவர்களை உள்ளடக்கிய அந்த அரங்கில் நான் பேசும்போது, "பரிதிமாற்கலைஞரை, மறைமலையடிகளைக் காணும் பேறு நமக்கில்லை; தேவநேயப் பாவாணரைக் கண்டவரும் உங்களில் ஒருசிலரே இருக்க இயலும்; என்றாலும் இம்மூவரையும் ஒரே வடிவில் காணும் அரிய பேறு உங்களுக்கு வாய்த்திருக்கின்றது, இதோ கண்டு வணங்குங்கள்' என்று மேடையில் நடுநாயகமாக வெண்ணிற உடையில், வெண்ணிற உடலில், தூய வெள்ளை உள்ளத்தோடு விளங்கிய, அங்கு வெளியிடப்படவிருந்த நூல்களின் ஆசிரியரான அப்பெருமகனைச் சுட்டிக்காட்டினேன். அரங்கின் கவனம் அவர்பால் அழுத்தமாகக் குவிந்தது. அவர்தாம் அறிஞர் இரா. இளங்குமரனார்.

 

 
மூத்த தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு! உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் பழ. நெடுமாறன் இரங்கல்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 31 ஜூலை 2021 14:29

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: நம் மத்தியில் மிக மூத்த தமிழறிஞராக வலம் வந்து தமிழின் சிறப்புகளை தனது எழுத்தாலும், பேச்சாலும் அனைவருக்கும் ஊட்டிப் பெருமிதம் கொள்ள வைத்த மாபெரும் தமிழறிஞர் இரா. இளம்குமரனார் அவர்கள் காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைந்தேன்.

 
அறிக்கை: தமிழ்நாட்டைப் பிரித்தால் கடும் போராட்டம் வெடிக்கும் -பழ. நெடுமாறன் எச்சரிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2021 14:19

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

 
தமிழ்நாட்டைப் பிரிப்பது நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வதாகும் - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 ஜூலை 2021 14:16

(தமிழர்களுக்கு என மொழிவழி அடிப்படையில் ஒரே மாநிலம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்து 15-12-2006 ‘தென்செய்தி’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை கீழே தரப்படுகிறது)

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டுத் தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

 

 
காவிரி மிகை நீரை முற்றிலுமாகத் தடுப்பதே கர்நாடகத்தின் நோக்கம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2021 14:12

1962ஆம் ஆண்டு மேகதாட்டு அணை கட்டுவதற்கு மின்சார உற்பத்தி செய்வதே நோக்கம் என கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால், அன்றைய தமிழக அரசின் கடும் எதிர்ப்பின் காரணமாக ஒன்றிய அரசு அத்திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 102 இல்
காப்புரிமை © 2021 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 80 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்