இந்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் |
|
|
|
சனிக்கிழமை, 02 ஆகஸ்ட் 2008 12:57 |
அனைத்துக் கட்சி - அனைத்துத் தமிழ் அமைப்புகளின் கூட்டுக் குழு அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஈழத்தமிழர்ளையும் தமிழக மீனவர்களையும் படுகொலை புரியும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டிக்கும்
வகையில் சென்னையில் இன்று நடத்துவதாக இருந்த பேரணியை ஆர்ப்பாட்டமாக நடத்தும்படி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. எனவே, திட்டமிட்டபடி பெரியார் சிலை முன் கூடுவதற்கு பதில், அனைவரும் சேப்பாக்கம் விருந்தினர் விடுதிக்கு எதிரே வந்து கூடும் படியும் அங்கு சரியாக 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெருந்திரளாகக் கூடி நமது கண்டனத்தை தெரிவிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். |