தங்களை தாங்களே மாய்க்கும் முறைகள் வேண்டாம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009 15:21 |
இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: ஈழத்தமிழர்களின் அவலநிலையைக் கண்டும், இந்திய அரசின் செயலற்ற நிலையைக் கன்டும் பல இடங்களில் மாணவர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டங்களை நடத்திவரும்
செய்திகளும், மற்றும் சில இடங்களில் உணர்வாளர்கள் சிலர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் செயல்களையும் அறிந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை தலைவர்களும் அளவிடமுடியாத மனவேதனை அடைந்திருக்கிறோம். தமிழக மக்களும் பதற்றமடைந்துள்ளனர். மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களின் உணர்வுகளை மதித்துப் பாராட்டும் அதே வேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றுபட்டுப் பெரும்போராட்டங்கள் நடத்த இருப்பதால் ஆங்காங்கே நடைபெறும் இத்தகைய போராட்டங்களைக் கைவிடுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறேன். |