இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஈழத்தமிழர்களை காக்கச் சூளுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 பெப்ரவரி 2009 15:28
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

7-2-2009 அன்று கருப்புக் கொடிப் பேரணி முடிந்து ஏற்க வேண்டிய சூளுரை

1. இலங்கையில் சிங்கள அரசின் கொலை வெறி இராணுவத் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தின் விளிம்பில் துடிக்கிற நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை பாதுகாக்க வீறுகொண்டு எழுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம்.
2. தமிழின அழிப்புப் போரை நடத்தும் சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசுக்கு இராணுவ ரீதியான உதவி உட்பட அனைத்துவகை உதவிகளையும் வழங்கித் துணை நிற்கும் இந்திய அரசின் மன்னிக்க முடியாத துரோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
3. தமிழக மக்கள் ஒன்றுபட்டு எழுப்பும் போர் நிறுத்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திப் போராட உறுதி பூணுகிறோம்.
4. அரசியல் சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து ஈழத்தமிழர் துன்பம் துடைப்பதில் முன்னிற்போம் என உறுதி கூறி கரம் கோர்க்கிறோம்.
5. எத்தகைய அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் அனைத்துவிதமான தியாகங்களுக்கும் தயாராகி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க ஒன்றுபட்டுப் போராடுவோம் என வீரத் தியாகிகள் முத்துக்குமார், ரவி ஆகியோரின் பெயரால் ஆணையிட்டு சூளுரைக்கிறோம்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.