சுதந்திர தமிழீழத்தை கருணாநிதி தன் வாழ்நாளிலேயே காண்பார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009 15:41
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள்.
நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவதைப் போன்று பேசியிருப்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி. கருணாநிதி தன் வாழ்நாளிலேயே அதைக் காண்பார்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.