அறிக்கை: எழுத்தாளர் பெ.சு. மணி மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021 18:12

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: சிறந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான நண்பர் பெ.சு. மணி அவர்கள் காலமான செய்தி அறிய மிக வருந்துகிறேன்.

 

இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழர், தமிழ்நாட்டின் பங்களிப்புக் குறித்து இதுவரை வெளிவராத செய்திகளை ஆதாரப்பூர்வமாகத் திரட்டிப் பல நூல்களை எழுதியவர். குறிப்பாக, பாரதி, சிவா, விவேகானந்தர், இராமகிருட்டிணர் குறித்து இவர் எழுதிய நூல்கள் மக்களுக்குத் தெளிவூட்டின. பிரம்ம சமாஜம் குறித்தும், அன்னிபெசன்ட் அம்மையார் குறித்தும் இவர் எழுதிய ஆய்வு நூல் மிகச் சிறந்ததாகும். வள்ளலாரின் வழியைப் பின்பற்றியே பிரம்ம சமாஜம் அமைக்கப்பட்டது என்னும் செய்தியை முதன்முதலாகப் பதிவு செய்த பெருமை இவருக்கு உண்டு. இவரது நூல்கள் வரலாற்று அறிஞர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் என்றும் வழிகாட்டியாகத் திகழும்.

நண்பர் பெ.சு. மணி அவர்களின் மறைவு தமிழ் எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும். அவரது மறைவினால் வருந்தும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.