அறிக்கை: சனநாயகக் கடமையாற்ற ஒன்றுபடுவோம்! வெற்றி பெற்ற அனைவருக்கும் பழ. நெடுமாறன் வேண்டுகோள்! |
|
|
|
திங்கட்கிழமை, 03 மே 2021 18:14 |
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :- நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று முதல்வர் பொறுப்பை ஏற்கவிருக்கிற தி. மு. க. தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவ்விதமே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், வெற்றி பெற்ற அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்தினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் காலக் கட்டத்தில் உருவான கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்ற முற்படுதல் அனைத்துக் கட்சியினரின் நீங்காத சனநாயகக் கடமையாகும். குறிப்பாக கொடிய கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய மாபெரும் பணி நம் முன் நிற்பதை உணர்ந்து ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் இணைந்து, கரம் கோர்த்து செயல்பட வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். |