அறிக்கை: தமிழினப்படுகொலை நாள்! அவரவர் வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்துக! பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021 18:21

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

2009-ஆம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள இராணுவ வெறியர்கள் ஒன்றரை இலக்கத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை ஈவிரக்கமின்றிப் பதறப் பதறப் படுகொலை செய்தனர்.

 

ஈழத் தமிழர்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு ஆளாயினர். இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் மனித நேய செயற்பாட்டாளர்கள் இனப் படுகொலை நாளாக கடைப்பிடித்து கொலையுண்ட மக்களை நினைவு கூர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நாளாகும்.

கொடிய கொரோனா தொற்று நோய் பரவி பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் இந்தச் சூழ்நிலையில் அவரவர்கள் வீடுகளில் மாலை நேரத்தில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வீர வணக்கம் செலுத்துமாறு தமிழர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.