அறிக்கை: உலகப் பெருந்தமிழர் கி. இராசநாராயணன் மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021 18:22

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழ்நாட்டின் முதுபெரும் எழுத்தாளரும் நாட்டுப்புறக் கதைக் களஞ்சியத்தைத் தொகுத்தவரும், குறிப்பாக கரிசல் மண் சார்ந்த எழுத்தாக்கங்களைப் படைப்பதில் முன் மாதிரியாகத் திகழ்ந்தவருமான கி. இராசநாராயணன் அவர்கள் காலமான செய்தி தமிழ் எழுத்துலகிற்குப் பேரிழப்பாகும்.

 

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்கியல் துறையின் பெருமைதரு பேராசிரியராகப் பணியாற்றி, நாட்டுப்புற ஆய்வியலில் ஈடுபட எண்ணற்றவர்களை உருவாக்கியப் பெருமைக்குரியவர்.

2008-ஆம் ஆண்டில் உலகத் தமிழர் பேரமைப்பு நடத்திய உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் அவருக்கு “உலகப்பெருந்தமிழர்” விருதினை வழங்கிச் சிறப்பித்தோம். இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற கி. ரா. அவர்களின் மறைவு யாராலும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தைத் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திவிட்டது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.