அவசரம் : பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் படுகொலை - போராட தயாராகுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 15 மே 2009 16:48

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியாவில் தேர்தலுக்கு பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது.

அதைவிட பல மடங்கு அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவ உதவியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்திகள் நமது நெஞ்சங்களைப் பிழிகின்றன.
இந்த கொடுமையைத் தடுத்து நிறுத்த முன் வராமல் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எனவே தமிழக மக்ள் ஒன்று திரண்டு கொந்தளித்துப் போராடத் தயாராகுமாறு வேண்டிக் கொள்கிறேன். மற்ற தலைவர்களையும் அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து நாளைப் போராட்டத் திட்டத்தை அறிவிக்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.