வணங்காமண் - இராசபக்சேவுக்கும் கருணாநிதிக்கும் வேறுபாடில்லை - பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 19 ஜூன் 2009 16:57 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் போதுமான உணவோ, மருந்தோ அளிக்கப்படாமல் பசியும், பட்டினியுமாகக் கிடப்பதை அறிந்து ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் சுமார் 800 டன் எடை கொண்ட உதவிப்பொருட்களை வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் இலங்கை அரசு கொஞ்சமும் மனிதநேயமில்லாமல்
அதை அனுமதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டது. இப்போது அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப்பொருட்களை சென்னையில் இறக்கி தமிழகத்திலுள்ளஅகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யும்படி தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு ஒரு வார காலத்திற்கு முன்பாகவே கடிதம் மூலம் வேண்டுகோள் புலம்பெயர்ந்த தமிழர்களால் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் முதலமைச்சர் எத்தகைய நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. இதன் விளைவாக அந்தக் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சரின் இந்த அலட்சியப் போக்கினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். புலம்பெயர்ந்த தமிழர்களால்அனுப்பப்பட்ட பொருள்களை திருப்பி அனுப்பிய இலங்கை அதிபர் இராசபக்சேயின் நடவடிக்கைக்கும் முதலமைச்சர் கருணாநிதியின் அலட்சிப்போக்கிற்கும் இடையே அதிக வேறுபாடில்லை என்பதை மிக்க வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன். |