உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் - பழ.நெடுமாறன் அழைப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 19 ஆகஸ்ட் 2009 17:44
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
‘‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம்’’ வெளியிடும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி இன்று (20-08-2009) மாலை 6 மணிக்கு சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ சாலையில் நடைபெறும். இம்மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் தலைமை தாங்குகிறார். மரு. ச. இராமதாசு, வைகோ, தா. பாண்டியன், திண்டிவனம் க. இராமமூர்த்தி, ம. நடராசன், இயக்குநர் பாரதிராசா, பசுபதி பாண்டியன், மெல்கியோர், த. வெள்ளையன், இராசேந்திரசோழன், சூரியதீபன், ஹென்றி டிபேன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. உலகறிய நாம் செய்யவிருக்கிற இந்த பிரகடனம் ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் வழிகாட்டும் பிரகடனமாகும். எனவே, இக்கூட்டத்தில் கட்சி, சாதி, மத வேறுபாடில்லாமல் அனைத்துத் தமிழர்களும் திரளாக கலந்துக் கொண்டு கடமையாற்ற முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.