முல்லைப் பெரியாறு : மறியல் போராட்டம் வெற்றிபெற அனைவரும் பங்கேற்போம் |
|
|
|
வியாழக்கிழமை, 27 மே 2010 18:57 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப்பெரியாறு அணையில் நமது உரிமையை நிலைநாட்டும் வகையில் கேரள சாலைகளை மறிக்கும் முற்றுகைப் போராட்டம் மதுரை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.
கம்பம்-குமுளி சாலையில் முல்லைப்பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெறும். கம்பம்மெட்டுச் சாலையில் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் நடைபெறும். மறியலில் கலந்துகொள்ளவிருக்கும் தோழர்கள் 28-05-10 அன்று காலை 9 மணிக்குள் பேருந்து நிலையம் அருகே வந்துகூடவேண்டும். மறியலில் அனைவரும் கட்டுப்பாடாகவும், அமைதிக்கு பங்கம் இல்லாத வகையிலும் நடந்துகொண்டு மறியலை வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். |