மரண தண்டனை ஒழிப்பு : காந்தியடிகள் பிறந்தநாளில் தமிழகமெங்கும் பட்டினிப் போராட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011 13:18
3 தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து நகரங்களிலும் ஊர்களிலும் பட்டினிப் போராட்டம் நடத்த வேண்டும் என 3 தமிழர் உயிர்காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், மனித உரிமை இயக்கங்களும் பங்கு கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.