கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது தாக்குதல் - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012 19:48 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : கூடங்குளம் அணுமின் உலைக் குறித்து மத்திய நிபுணர்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போராட்டக்குழுவினர் உதயகுமார் தலைமையில் சென்றபோது அவர்களை, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.
அணுஉலைக் குறித்த மக்களின் நியாயமான அச்சத்திற்கு மதச்சாயம் பூசி திசைத்திருப்பிக் குழப்புவதற்கு இந்து முன்னணி முயலுகிறது. இந்தப் போக்கிற்கு எதிராக சகல சனநாயக சக்திகளும் அணிதிரளவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |