பென்னி குயிக் பெயரில் நீர் மேலாண்மை பயிற்சிக் கல்லூரி அமையுங்கள் - முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012 12:42 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப்பெரியாறு அணை கட்டிய பிரிட்டிசுப் பொறியாளர் பென்னி குயிக் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவதென முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பை பாராட்டுகிறேன்.
முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளுக்கு உதவும் வகையில் பென்னி குயிக் பெயரில் நீர் மேலாண்மை பயிற்சிக் கல்லூரி ஒன்றினையும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுவும்படி முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். |