வான் புலிகள் தாக்குதல்.. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!!! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 26 மார்ச் 2007 13:42
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் முதல் தடவையாக வான் புலிப் படையைச் சேர்ந்த இரு விமானங்கள் பறந்துசென்று தலைநகரமான கொழும்புவில் உள்ள சிங்கள விமானப் படையைச் சேர்ந்த கட்டுநாயகா விமானத் தளத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துவிட்டு பத்திரமாகத் திரும்பியுள்ளன என்ற செய்தி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகாலமாக போர் நிறுத்த உடன்பாட்டினை விடுதலைப் புலிகள் உண்மையாக கடைப்பிடித்தனர். ஆனால் சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கத் தவறியதோடு தமிழர்கள் வாழும் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தியும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும் அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்து வந்தது. சிங்கள இராணுவத்தின் இந்த அட்டுழியத்தை சர்வதேச நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டியும் கூட எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் வான் புலிகள் நடத்தியிருக்கக்கூடிய வெற்றிகரமானத் தாக்குதலை கண்டிக்கவோ குறைசொல்லவோ யாருக்கும் தகுதி இல்லை.
கடந்த பல மாதங்களாக தொடர்ந்து ஆத்திரமுட்டப்பட்டு வந்தபோதிலும் விடுதலைப் புலிகள் அமைதிக் காத்தனர். அதன் விளைவாக இழப்புகளுக்கும் ஆளானார்கள். விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுவிட்டதாகக் கருதி இந்தியாவில் உள்ள சில தலைவர்களும் பத்திரிகைகளும் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டனர். ஆனால் இப்போது வான்புலிகள் தாக்குதலுக்குப் பிறகு பொய்ப்பிரச்சாரம் செய்தவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் வலிமை ஒருபோதும் குறையவில்லை. முன்னிலும் அதிகமாயிருக்கிறது என்பதை இப்போதாவது உணர்ந்து சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்தியா சிங்கள அரசை கண்டிக்கவும் இனப்பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை மேள்கொள்ளுமாறும் வலியுறுத்தவும் முன்வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.