அச்சகங்களுக்குக் காவல்துறை மிரட்டல் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பழ.நெடுமாறன் புகார் |
|
|
|
சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009 14:37 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : ஈழத் தமிழர் அவலநிலை குறித்த சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், அச்சடிக்க தமிழக அரசு மறைமுக தடை விதித்துள்ளது. தமிழ்நாடு எங்கும் உள்ள அச்சகங்களைக் காவல்துறையினர் வாய்மொழியாக மிரட்டியுள்ளனர். எழுத்துப்பூர்வமான எத்தகைய ஆணையையும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியான நரேஷ்குப்தாவை மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் சந்தித்து இது குறித்துப் புகார் செய்தார். இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். |