சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009 14:42 |
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயக்குனர் சீமானைக் கைது செய்தது தவறு என்றும் அவரை உடனடியாக விடுவிக்கும்படியும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதை சனநாயக உணர்வு படைத்தவர்கள் அனைவரும் வரவேற்பார்கள்.
தேர்தல் வேளையில் எதிர்க்கட்சியினர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம்போன்ற கொடிய சட்டங்களை ஏவி சனநாயக உரிமைகளை அடியோடு பறிக்க முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகளை இத்தீர்ப்பின் மூலம் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஈழத்தமிழர்களையோ விடுதலைப்புலிகளையோ ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என எங்கள் மீது தொடுக்கப்பட்ட பொடா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட கொஞ்சமும் மதிக்காமல் எதேச்சதிகாரமாகச் செயல்பட்டு அதே குற்றச்சாட்டுகளைக் கூறி சீமான், கொளத்தூர் மணி நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த கருணாநிதி இனியாவது திருந்த வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதித்து கொளத்தூர்மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறேன். |