தனியரசு மீது தாக்குதல் : பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வியாழக்கிழமை, 12 நவம்பர் 2009 15:20 |
கொங்கு இளைஞர் பேரமைப்பின் பொதுச்செயலாளர் தனியரசு அவர்களும் அவரது தோழர்களும் தி.மு.க. கழகத்தைச் சேர்ந்தவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு கரூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஈழத் தமிழர் பிரச்சினையிலும் மற்றும் தமிழர் பிரச்சினைகளிலும் உணர்வுப் பூர்வமாக ஈடுபட்டு தொண்டாற்றி வருபவர் தனியரசு. சனநாயகக் கடமையை ஆற்றிவரும் அவரை பாசிச முறையில் ஒடுக்கிவிடுவதற்கு முயற்சி செய்யும் தி.மு.க.வினரின் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|