உயிர்நீத்த தமிழர்களுக்காக நினைவுக் கூட்டங்கள் நடத்தத் தடையா? PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 26 நவம்பர் 2009 15:27
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டனச் செய்தி
இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துவதற்குக் காவல்துறை பல இடங்களில் அனுமதித் தர மறுத்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன. மேலும் இந்நிகழ்ச்சி குறித்து சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் ஆகியவற்றை அச்சிடக் கூடாதென அச்சகங்கள் காவல்துறையால் மிரட்டப்பட்டுள்ளன. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சனநாயக உரிமைகளை பறிப்பதோடு மட்டுமல்ல, சகோதரத்தமிழர்களுக்காக நினைவு கூட்டங்கள் நடத்துவதையும் அனுமதிக்க மறுப்பது அப்பட்டமான தமிழ் விரோதப் போக்காகும்.
அன்று நினைவு கூட்டங்களை மண்டபங்களிலாவது அல்லது வீடுகளிலாவது அவசியம் நடத்துமாறும் அன்றிரவு தமிழர் வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்றி மறைந்தவர்களின் நினைவைப் போற்றுமாறும் அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன்.
அத்துடன் இலங்கை இனவெறி அரசு முப்படை கொண்டு நடத்திய மூர்க்கத்தனமான போரில் குண்டடி பட்டு காயமடைந்து, உடல் உறுப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து, இன்றும் சித்திரவதைக் கூடங்களில் அளவிட முடியாத கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் உறுதி ஏற்க வேண்டுகிறோம்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.