இலங்கைச் சிறையில் தமிழர்கள் பட்டினிப் போராட்டம் |
|
|
|
புதன்கிழமை, 09 டிசம்பர் 2009 15:29 |
இலங்கையில் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையுமின்றி கடந்த 5 முதல் 8 ஆண்டுகளாக அனுராதபுரத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரி 8-12-2009 அன்று முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இவர்களோடு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளும் இதே கோரிக்கையுடன் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். வரும் 10-12-2009 அன்று இந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் இவர்களின் விடுதலையை வேண்டி வவுனியாவில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்த உள்ளனர். |