ஈழத் தமிழர் பிரச்சனை அடியோடு கைகழுவப்பட்டுள்ளது |
|
|
|
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2010 15:42 |
பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை : ஆளுநர் உரை தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கோடு மக்களின் எதிர்கால நலனுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. இலவசங்களை வாரி இறைத்து மக்களை ஏமாற்றும் முயற்சி.
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கவோ அவர்களுக்கு குறைந்த பட்சம் இரங்கல் தெரிவிக்கவோ கூட ஆளுநர் உரையில் எதுவும் இல்லாதது. இந்த அரசு அந்தப் பிரச்னையை அடியோடு கை கழுவிவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது. |