பொங்கல் திருநாள் துக்கநாள் |
|
|
|
திங்கட்கிழமை, 11 ஜனவரி 2010 15:43 |
உலகத் தமிழர்களுக்கு பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள் தமிழர் திருநாளான பொங்கல் பெருநாள் இவ்வாண்டு தமிழர்களுக்கு மிகத் துயரமான காலகட்டத்தில் வந்துள்ளது. மூவாயிரம் ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத வகையில் இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு மூன்று இலட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு
சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் முத்துக்குமார் உட்பட 18 தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். எனவே துயரம் நிறைந்த இவ்வேளையில் பொங்கல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மனநிலையில் தமிழர்கள் இல்லை. எனவே இவ்வாண்டு பொங்கல் நாளை கொண்டாடாமல் தவிர்த்து உயிரிழந்த தமிழர்களுக்காகக் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நாளாகக் கடைப்பிடிக்கும்படி உலகமெல்லாம் வாழும் தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன். |