ஜூன் 8ல் இராசபக்சேவுக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! மயிலை நாகேசுவரராவ் பூங்கா அருகே திரளுவீர்! பழ. நெடுமாறன்-வைகோ-தா.பாண்டியன் கலந்துகொள்கிறார்கள் |
|
|
|
திங்கட்கிழமை, 07 ஜூன் 2010 16:20 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே இந்தியா வரவிருக்கும் ஜூன் 8ஆம் தேதியன்று அவருக்கு எதிராக சென்னையில் டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபேறவிருக்கிறது. மயிலை நாகேசுவரராவ் பூங்கா அருகே திரளும்படியும்
அங்கிருந்து இலங்கைத் துணைத்தூதர் அலுவலகம் நோக்கிச் செல்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், பெரியார் தி.க. பொதுச்செயலாளர் இராசேந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் செயலாளர் மணியரசன், தமிழ்த்தேச விடுதலை முன்னணி செயலாளர் தியாகு, தமிழர் தன்மானப் பாசறையின் செயலாளர் ஆவடி மனோகரன் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் பங்கேற்கிறார்கள். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டங்களிலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துகொள்வார்கள். சென்னை ஆர்ப்பாட்டத்திலும் மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களிலும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக்கொள்கிறேன். |