பந்த் போராட்டத்திற்கு ஆதரவு! - பழ. நெடுமாறன் அறிக்கை |
|
|
|
சனிக்கிழமை, 03 ஜூலை 2010 20:29 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நியாயமற்ற வகையில் உயர்த்தி இருப்பதைக் கண்டித்து 45க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஜூலை 5ஆம் தேதி நடத்தவிருக்கும் பந்த் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை நல்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
இந்தியச் சந்தையில் பெட்ரோல் ரூ.58.90க்கு விற்கப்படுகிறது. ஆனால் கச்சா எண்ணெய் விலை மற்றும் சுத்திகரிப்புச் செலவு உள்பட அதன் விலை ரூ.28.90 மட்டுமே ஆகிறது. மத்திய, மாநில அரசுகளின் வரிகள் மட்டுமே ரூ.30 ஆகிறது. அரசே முன்னின்று நடத்தும் மிகப்பெரிய கொள்ளை இது. இதன் விளைவாக மக்களுக்குத் தேவையான அத்தியவாசியமான பொருட்கள் அனைத்தும் விலை உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. தாங்கள் விதிக்கும் வரியை குறைத்துக்கொள்ள மத்திய மாநில அரசுகள் பிடிவாதமாக மறுக்கின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நடத்தப்படும் பந்த் போராட்டத்தை முழுமையாக வெற்றியடையச் செய்யும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். |