இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் தமிழர்கள் அனைவரும் திரண்டுவரும்படி பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2010 20:48
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படை நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறித்து ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவை ஏற்க மறுத்த இலங்கை அரசின் செயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சூலை 14ஆம் தேதி காலை 11 மணிக்கு
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மயிலை-லஸ் சந்திப்பின் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா முன்பு காலை 10 மணிக்குக் கூடி அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்துக்குச் செல்லுவோம்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தமிழமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களும் திரண்டு வரும்படி வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.