சீமானை விடுதலை செய்க! - பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 17 ஜூலை 2010 20:49 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழத் தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்தமைக்காக அவரை மிகக்கொடுமையான சட்டத்தின் கீழ் சிறையிலடைத்திருப்பது அப்பட்டமான சனநாயக விரோதப் போக்காகும்.
ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவாகப் போராடுபவர்களை மிரட்டி ஒடுக்குவதற்காக சீமான் பழிவாங்கப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஆதரவானப் போராட்டங்கள் தொடரும். நிலைமை முற்றுவதற்குள் சீமானை விடுதலை செய்யும்படி வலியுறுத்துகிறேன். |