சோனியா வருகை! நூற்றுக்கணக்கானவர்கள் கைது - பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை |
|
|
|
சனிக்கிழமை, 09 அக்டோபர் 2010 21:10 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி திருச்சி வருவதையொட்டி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட தமிழ்நாடெங்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி கைதுசெய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி வற்புறுத்துகிறேன்.
|