தாய்லாந்தில் தமிழ் அகதிகள் கைது அடைக்கலம் கொடுக்க நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2010 21:13 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் உயிர் வாழமுடியாத நிலைமையில் அங்கிருந்து தப்பித் தாய்லாந்துக்குச் சென்ற 130 ஈழத்தமிழர்களைத் தாய்லாந்து அரசு கைது செய்துள்ளது. இவர்களில் 60 பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவார்கள்.
அய்.நா. அகதிகள் ஆணையரிடம் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இதுகுறித்து முறையிட்டுள்ளன. அகதிகளாகத் தஞ்சம் புகுந்த தமிழர்களைத் தாய்லாந்து அரசு திருப்பியனுப்பக்கூடாது என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி தாய்லாந்து அரசை வேண்டிக்கொள்கிறேன். மனித நேய அடிப்படையில் அய்.நா.அகதிகள் ஆணையமும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இப்பிரச்சினையில் தலையிட்டு அந்தத் தமிழர்களுக்குப் பாதுகாப்பும், புனர்வாழ்வும் அளிக்க உதவவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இது குறித்து அய்.நா. அகதிகள் ஆணையருக்கு வேண்டுகோள் கடிதங்களையும், தந்திகளையும் அனுப்பும்படி தமிழ் அமைப்புகளையும், மற்றும் கட்சிகளையும் வேண்டிக்கொள்கிறேன். |