புலிகள் மீதான தடை நீடிப்பு - நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2010 21:18 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: விடுதலைப் புலிகள் மீது இந்திய அரசு விதித்துள்ளத் தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதாகத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. தீர்ப்பாயத்தில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் எதிர்த்தரப்புக்கு அளிக்கப்படவில்லை. அரசு தரப்பு சாட்சிகளை நேரடியாகக் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
என்றாலும் இவ்வளவு இடர்ப்பாடுகளுக்கு நடுவில் தடையை நீடிக்கக்கூடாது என்பதற்கான நியாயமான வலுவான காரணங்களை நாங்கள் தீர்ப்பாயத்திற்கு முன்னர் வைக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் இந்திய அரசு நடத்திய பொய்மை நாடகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்த நாடகம் இந்திய அரசினால் நடத்தப்படுகிறது. பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தியாவில் இயங்காத ஒரு இயக்கத்தின் மீது தொடர்ந்து தடை விதிப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானதாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். |