ஐ.நா. விசாரணைக் குழுவிற்கு ஆதாரங்களை அனுப்புக! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2010 21:22 |
இலங்கையில் இறுதிக்கட்டப்போரில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக 22-06-10 அன்று ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களிடமிருந்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் மேலதிக விவரங்களையும் பெறவிரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
1. 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அல்லது பாதிப்படைந்த விதங்களையும் அனுப்பி வைக்கலாம். 2. விசாரணைக் குழுவிற்குத் தமிழர்கள் தங்களது சாட்சியங்களை அனுப்பிவைக்கத் தவறினால் சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்குக் கிடைக்கப்பெறும் என்பதை ஒருபோதும் மறவாதீர். 3. நீங்கள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உங்களுடைய உறவினர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போயிருந்தாலோ இல்லையேல். பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருந்தாலோ ஐ.நா. விசாரணைக்குழுவிற்குத் தெரியப்படுத்தலாம். 4. புகார்களை முதலில் அனுப்புங்கள். ஆதாரங்களை தற்போது அனுப்ப வேண்டியது இல்லை. ஆதாரங்கள் உங்களிடம் தற்போது இல்லாவிட்டாலும் கூட ஊடகங்களின் இணைப்புகளை ஆதாரம் காட்டி அனுப்பலாம். தேவைப்படும்போது ஆதாரங்களை அனுப்பிவைப்பதாகக் குறிப்பிடலாம். 5. ஒருவர் அல்லது ஒரு அமைப்பு ஒரு தடவைதான் அனுப்ப முடியும். எத்தனை மின்னஞ்சல்கள் வருகின்றன என்பதுதான் முக்கியமாகக் கணிக்கப்படுகிறது. 6. பதிக்கப்பட்ட பல ஈழத்தமிழர் குடும்பங்கள் எப்படியோ தப்பிப்பிழைத்துத் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளன. அவர்களை அணுகி இத்தகைய புகார்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களிடமிருந்து விவரங்களைச் சேகரித்து நாமே அனுப்பலாம். தமிழ் உணர்வாளர்கள் தங்களது தலையாய கடமையாகக் கருதி உடனடியாகச் செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மொழிபெயர்த்து இவற்றை அனுப்ப வேண்டுகிறோம். அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா.வின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகப் பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா. பேரவை தெரிவித்துள்ளது. இலங்கை அரச பயங்கரவாதத்தின் மனித உரிமை மீறல்களின் சாட்சியங்களை ஐ.நா. விசாரணைக் குழுவிற்கு அனுப்பிவைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் வரலாற்றுக் கடமையாகும். எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்து செயற்பட்டு ஆதாரங்களைத் திரட்டி உடனடியாக ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கவேண்டியது தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். அதை தவறாமல் செய்யும்படி அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக்கொள்கிறோம். இதுவே தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் இறுதி வாய்ப்பாகும். இதைத் தவறவிட்டால் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இந்த உலகம் ஒருபோதும் திரும்பிப் பார்க்காது என்பதை மறவாதீர்கள். விரைந்து செயற்படுங்கள்! புகார்களை அனுப்ப இறுதி நாள் 15-12-2010 ஆகும். புகார்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
விரும்பினால் அதே நேரத்தில் bcc இல்
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
க்கு அனுப்பினால் ஒரு பிரதி இவர்களிடம் சேமிக்கப்படும். |