இந்திய தமிழக அரசுகள் பொய்ப் பிரச்சாரம் - நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2010 21:25
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் கருணாநிதி மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப்புலிகள் அமைப்புத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என காவல்துறை தலைமை இயக்குநர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் நடந்த போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அதிபர் இராசபக்சே வெளிப்படையாக அறிவித்தார். அதற்கு பிறகு அவர் இந்தியாவில் உள்ள திருப்பதி, தில்லி முதலிய இடங்களுக்கு இந்திய அரசின் விருந்தினராக வந்து சென்றிருக்கிறார். விடுதலைப் புலிகளால் அவருக்கு எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை. இலண்டனுக்கு இராசபக்சே சென்ற போது அவருக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதை போல கோவை, பங்களூர் போன்ற இடங்களுக்கு வருகை தந்த சிங்கள அமைச்சர்களுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழர்களிடையே வளர்ந்து வரும் எழுச்சியையும் எதிர்ப்புணர்வையம் ஒடுக்குவதற்காகவும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையை திசைத் திருப்புவதற்காகவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை இந்திய # தமிழக அரசுகள் மேற்கொண்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.